வியாழன், ஜனவரி 07, 2010

புத்தகத்திருவிழா - பூவுலகு - சில புரிதல்கள்

சென்னை புத்தகத் திருவிழா அரங்கில் அமர்ந்திருக்கும்போது எப்போதோ படித்த உளவியலை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன.

"பூவுலகு" அரங்கிற்குள் வருபவர்களில் அதிகமானவர்கள் ஓரளவு உயர்படிப்பு படித்தவர்களாக இருந்தனர்.
பூவுலகு இதழுக்கு சந்தா செலுத்தியவர்களில் மிகப்பெரும்பாலோர் வி்ஞ்ஞானிகள் அல்லது தொழில்நுட்ப வல்லுனர்கள். அதிலும் சுவாரசியமாக "பூவுலகு" அதிகம் விமர்சனம் செய்யும் மரபணுத் தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தியின் ஆதரவாளர்கள் பலரும் சந்தா கட்டினர். அவர்களி்ல் ஒரு சிலர் தங்கள் அலுவலக முகவரிக்கே "பூவுலகு" இதழை அனுப்பச்சொல்லி ஆச்சரியப்படுத்தினர்.

அவர்களை அடையாளம் கண்டு, இதழ் குறித்தும், அவற்றில் வரும் கருத்துகள் குறித்தும் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துகளையும் எழுதுமாறு கேட்டுக்கொண்டபோது சிரித்துக் கொண்டே நழுவினர்.

இலக்கிய வாசகர்களுக்கு சூழல் தொடர்பாக பெரிய ஆர்வம் இல்லை என்றாலும், இலக்கிய வாதிகளுக்கும் - கலைஞர்களுக்கும் சூழல் தொடர்பான ஆர்வம் மட்டுமல்லாமல் அக்கறையும் இருப்பது தெரிந்தது. அரங்கிற்கு வந்த இலக்கியவாதிகளும், கலைஞர்களும் "பூவுலகு" அரங்கிற்கு வாசகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று அக்கறையுடன் விசாரித்தனர்.இலக்கியவாதிகளுக்கும், கலைஞர்களுக்கும் ஒரு கோரிக்கை!

உங்களின் ஆர்வமும், அக்கறையும் உங்கள் ரசிகர்களிடம் இருக்க வேண்டும்!!

அதற்கு வழிகாட்ட வேண்டியது நீங்கள்தான்!!!சூழல் சார்ந்த அரசுத்துறைகளில் பணியாற்றுவோர் பலரும் பூவுலகு அரங்கிற்கு தேடி வருகின்றனர். அவர்களில் பலர் பூவுலகின் நண்பர்களோடு இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க விரும்புவதாக தெரிவித்தனர்.கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் "பூவுலகு" இதழை இன்னும் எளிமைப்படு்த்தி அரசியல் விவகாரங்களை குறைத்தால் மாணவர்களிடம் "பூவுலகு" இதழை அறிமுகப்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்தனர்.மாணவர்களில் பலரும் "பூவுலகு" இதழ் ஆங்கிலத்தில் கிடைக்குமா? என்று ஆர்வத்துடன் கேள்வி எழுப்பினர்.-வழக்கறிஞர் சுந்தரராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக