சனி, டிசம்பர் 19, 2009

பூவுலகின் நண்பர்கள் ஆலோசனைக் கூட்டம் அழைப்பு

அன்புத் தோழமைக்கு, வணக்கம்!

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அண்மைக்கால செயல்பாடுகள் குறித்து அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

குறிப்பாக பூவுலகு சுற்றுச்சூழல் இதழை தாங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இரு மாதங்களுக்கு ஒருமுறை இதழாகத் தொடங்கி மூன்றே இதழ்களில், தங்களைப் போன்ற நண்பர்களின் அன்பையும், ஆதரவையும் வென்று பூவுலகு இதழை மாத இதழாக கொண்டு வரும் துணிவை பெற்றிருக்கிறோம்.

புத்தாண்டு முதல் பூவுலகு மாத இதழாக வெளிவருகிறது.

இதழைப் படிக்கும் பல நண்பர்கள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு செயல்பாடுகளுக்கான ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நண்பர்களின் ஆலோசனை குறித்து முடிவெடுக்கவும், புதிய திட்டங்களை தீட்டுவதற்கும் பூவுலகின் நண்பர்கள் ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 20-12-09 (ஞாயிறு) அன்று மாலை 4-00 மணியளவில் சென்னை, கீழ்பாக்கம் கார்டன் (மம்மிடாடி பேருந்து நிலையம் அருகே உள்ள) வெங்கடபதி தெரு எண்:17ல் உள்ள SCS Kothari Academy for Women இல் நடைபெறுகிறது.

தங்களைப்போன்று சமூகத்தின்மீது அக்கறை கொண்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நண்பர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ள உறுதி அளித்துள்ளனர்.

தங்கள் வருகையும், ஆலோசனைகளும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வளர்ச்சிக்கும், பூவுலகில் வாழும் மக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என்று நம்புகிறோம்.

இப்படிக்கு,

பூவுலகின் நண்பர்கள்

தொடர்புகளுக்கு: Dr. கு.சிவராமன் 94440 27455, ஆதி.வள்ளியப்பன் 94432 02598, காஞ்சனை” R.R. சீனிவாசன் 94440 65336, கோ. சுந்தர்ராஜன் 98410 31730,தோழமை தேவநேயன் - 94441 51626, பி. சுந்தரராஜன் 98402 46661, மு. வெற்றிச்செல்வன் 94434 16986, ஜார்ஜ் - 91765 33157

3 கருத்துகள்:

சீ.பிரபாகரன் சொன்னது…

பூவுலகின் நண்பர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

தங்களோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

பூவுலகின் நண்பர்கள் சொன்னது…

நன்றி சீ.பிரபாகரன் !

நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

Uma Maheswaran சொன்னது…

"பூவுலகு" மாத இதழாக வரவிருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி! தங்கள் குழுவினரின் பணி சிறக்கவும் மேலும் நிறையப் பேர்களை "பூவுலகு" சென்றடையவும் வாழ்த்துக்கள்!

கருத்துரையிடுக