திங்கள், மே 04, 2009

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்

ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்
வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

- ஆதி வள்ளியப்பன்
(valliappanpress@gmail.com)

(நன்றி- பயோடெக் பேக்ஸ் வெளியிட்ட அறிக்கை)

11 கருத்துகள்:

KRICONS சொன்னது…

Congrats Now your Post displayed in Youthful Vikatan Home page

IDEAL சொன்னது…

நன்றி நண்பரே

அனைவரும் படித்து தெரிந்து பின்பற்றவேண்டிய தகவல்கள்..

தீப்பெட்டி சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு...
எனக்கு தெரிந்து ஜெயலலிதா ப்ளாஸ்டிக் பைகளுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தார். அப்போது மக்களாலும் ஊடகங்களாலும் பலத்த விமர்சனத்திற்கு உள்ளானார். குறிப்பாக ஆனந்த விகடன் ஜெ-யின் முடிவை முட்டாள்தனமாக எதிர்த்தது நினைவில் உள்ளது.
தமிழக ஊடகங்கள் பெரும்பாலும் தொலைநோக்கில் சிந்திப்பது இல்லை (குறிப்பாக வெகுஜன ஊடகங்கள்)

malar சொன்னது…

பிளாஸ்டிக் பையினை உபயோகிக்காமல் தவிக்கும் வழிகள்?

seeprabagaran சொன்னது…

கடைத்தெருவிற்கு செல்லும்போது வீட்டிலிருந்து துணிப்பை எடுத்துச்செல்லும் பழக்கத்தை நாம் மீண்டும் கடைபிடிக்க வேண்டும். மீன் வாங்குவதற்கு பனை ஓலையால் செய்யப்பட்ட “பரி”யை யாரும் இப்போது பயன்படுத்துவதே இல்லை. பரியில் மீன் போன்ற இறைச்சிகளை எடுத்துச்செல்லும் போது கெடாமல் இருக்கும்.

இதை நமது வீடுகளில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதே சிரமமாக உள்ளது. வீட்டில் மனைவியிடமும் பெற்றோரிடம் இழி சொல்லுக்கு ஆளாகிறோம்... “பெருசா இவரு சீர்திருத்தம் செய்ய வந்துட்டார்” என்று நக்கல் வேறு. இருப்பினும் ஞெகிழி பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியை தொடர்ந்து செய்வோம்...

பெயரில்லா சொன்னது…

வணக்கம். பிளாஸ்டிக் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்ட ஞெகிழி புத்தகம் கிடைக்குமா? தகவல் தெரிவிக்கவும்.

Nitharsan சொன்னது…

ammaa entru

சாதிக் அலி சொன்னது…

மிக நல்ல பதிவு.பயனுள்ள தகவல்கள். தொடரட்டும் உங்கள் சேவை

பெயரில்லா சொன்னது…

Good one! Awareness is very important!!!
Thank you!

பெயரில்லா சொன்னது…

அவசர உலகம். ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். நல்ல பதிவு. வெகு சன ஊடகங்களிலும் உங்கள்
படைப்புகள் வரும் நாளை எதிர்பார்க்கிறேன். நிறைய எழுத வேண்டும் போல் இருக்கிறது!
இயந்திர கதியில் மிகப் பெரும்பாலானவர்களுக்கு பல விவரங்கள் தெரியாமலேயே போய்விடுகிறது. ப்ளாஸ்டிக் மிகவும் தேவை, மாற்றுப் பொருட்கள் இல்லை என்னும் நிலையில் மட்டுமே, உபயோகப்படுத்த வேண்டும்.
இங்கே வட அமெரிக்காவில், கோவிலில், உணவு வாங்கும் போது,ஸ்டைரபோம் கன்டைனரில் கொடுப்பார்கள். என்னங்க, நம்ம
ஊர் மாதிரி (அந்தக் காலம்), தொன்னையில கொடுக்கலாமே என்று சொன்னேன். அதற்குக் கிடைத்த பதில், தொன்னையில் இருக்கும் குச்சி, கையைக் குத்தி விடும். அழுவதா, சிரிப்பதான்னு தெரியவில்லை! தொன்னை விற்று பணக்காரர் ஆவதற்கு இங்கு இன்று சூழ்நிலை சாதகமாகவே இருக்கிறது. சுற்றுப்புற சூழ்நிலை குறித்த விழிப்புணர்வு, அமெரிக்கர்களுக்கு அதிகமாகவே, அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒரு பெரிய அங்காடியில், பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை அறவே நிறுத்தி விட்டார்கள்! வீட்டிலிருந்து பை எடுத்துப்போக வேண்டும், இல்லையென்றால், காகிதப் பை
கொடுப்பார்கள்.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிச் சுற்றுலா சென்றபோது, அழைத்துச் சென்ற இடம், பாலிதின் பைகள் செய்யும் தொழிற்சாலை! அப்போதெல்லாம், மளிகை கடையில் பொட்டலம் மடிப்பது செய்தித்தாள்களில்தான்!
மறுபடியும் வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

//Each bag shoppers bring in to use has the potential to eliminate an average of 1,000 plastic bags over its lifetime.

Americans throw away about 100 billion plastic bags annually, and only 0.6 percent of them are recycled//

கருத்துரையிடுக