வியாழன், ஜனவரி 08, 2009

சென்னை புத்தகத்திருவிழாவில் பாரம்பரிய பொங்கல்விழா (12-01-09)

அன்புத் தோழமைக்கு,

வணக்கம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பெயரால் கலாசாரமும், பண்பாடும் மட்டுமல்ல நம் வாழ்வுரிமையும் கேள்விக்குள்ளாகிறது.

இந்நிலையில் நமது மரபுகளையும், மாண்புகளையும் மீட்டெடுக்கும் விதமாக பாரம்பரிய பொங்கல் விழாவை எதிர்வரும் 11-01-2009 ஞாயிறு அன்று காலை சென்னை புத்தகத் திருவிழா வளாகத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
Pongal Invitationஉரம், பூச்சிமருந்து, மரபணுமாற்றம் இல்லாத இயற்கை விளைபொருட்களைக் கொண்டு இந்த பொங்கலை சமைக்க உள்ளோம். இந்த நிகழ்வில் நமது சிந்தனைக்கும் விருந்தளிக்கும், புத்தக வெளியீடு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் திட்டமிட்டுள்ளோம்.

எனவே தாங்கள், தங்கள் சுற்றம் சூழ இந்த நிகழ்விற்கு வருகை தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அவாள் ஒண்ணுமே சொல்லமாட்டாளா? அவாள்தானே புக் எக்ஸிபிக்ஸன் நடத்துறா?

பெயரில்லா சொன்னது…

அழைப்பிதழை சற்று பெரிதாக தரவேற்றலாமே. அல்லது அழைப்பிதழில் உள்ள விவரங்களை தனியாகத் தரலாம். பிரவுசிங் சென்டரில் படிப்பவர்கள் டவுன்லோடு செய்து படிப்பது சாத்தியமில்லையே.

கருத்துரையிடுக