வெள்ளி, டிசம்பர் 12, 2008

மரபணு மாற்று வேளாண்மை : அன்புமணி ராமதாஸ் x கபில்சிபல்

மரபணு மாற்று வேளாண்மை குறித்து இந்திய அரசின் முக்கிய அமைச்சர்களிடையே ஒத்த கருத்து நிலவவில்லை.

கடந்த செவ்வாய் அன்று காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் அன்புமணி, நுகர்வோர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதற்கான சோதனைகள் நடைபெறாத நிலையில் மரபணு மாற்ற உணவுப் பொருட்களை தம்முடைய அமைச்சகம் அனுமதிக்காது என்று கூறினார்.

ஆனால் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கபில்சிபல், இந்திய அரசு மரபணு மாற்ற வேளாண்மைக்கு ஆதரவு நிலையிலேயே உள்ளது என்று தெரிவித்தார். ஏற்கனவே மரபணு மாற்ற பருத்தி குறித்த ஆய்வுகள் நடைபெறுவதாக தெரிவித்த அவர், மேலும் பல வேளாண்பொருட்களில் மரபணு மாற்ற வகைகள் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக தெரிவித்துள்ளார்.


வீடியோக் காட்சிஆனால் சூழலியல் ஆர்வலர் கவிதா குருகந்தி, மரபணு மாற்ற வேளாண்பொருட்கள் மக்களின் உடல்நலத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக எச்சரிக்கை தெரிவித்துள்ளார். அண்மையில் ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஆய்வில் மரபணு மாற்ற உணவுப்பொருட்கள் கொடுக்கப்பட்ட எலிகளுக்கு ஆண்மைக்குறைவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார்.


விரைவில் மரபணு மாற்ற கத்திரிக்காய் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் சுமார் 180 நாடுகளி்ல் மரபணு மாற்று உணவுப்பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ள சூழலில், இந்தியாவின் முக்கிய அமைச்சர்கள் இருவரிடம் மரபணு மாற்ற உணவுப்பொருட்கள் குறித்த மாறுபட்ட கருத்து நிலவுவது கவலை தருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

நன்றி: CNN-IBN தொலைக்காட்சி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

'உலகில் சுமார் 180 நாடுகளி்ல் மரபணு மாற்று உணவுப்பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ள சூழலில்'

இது தவறான தகவல்,ஆங்கிலச் செய்திகுறிப்பில் உள்ளது.கபில் சிபல் கூறுவதுதான் மத்திய அரசின்
கொள்கை.சரியான கொள்கை.

கருத்துரையிடுக