புதன், ஜூன் 08, 2016

பூவுலகு இதழ் - ஒரு அறிவிப்பு

பூவுலகு இதழை இதுவரை முறையாக வெளியிடாததற்கு முதலில் வருத்தம் தெரிவிக்கிறோம்.நிதி நிர்வாக சிக்கல்கள், நடைமுறை தடைகள், நினைத்தபோது மலரலாம் "பூவுலகு" என்கிற எண்ணம் சார்ந்த கோட்பாடுகள், அதிகமான வெகுஜன வாசகர்கள் புரிந்து படித்துவிடக்கூடாது என்கிற கொள்கை விளக்கங்கள், சாதாரண மக்களுக்கும் பிடித்த கட்டுரைகள் கவிதைகள் வந்தால் "காத்திரமான" இதழ் என்கிற பெயர் கிடைக்காது என்கிற மூடநம்பிக்கைகள், நம்பிக்கை துரோகங்கள் என்று பல்வேறு தடைகளை தாண்டி பூவுலகு இதழை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்கிறோம்.

பூவுலகு இதழை நண்பர்கள் விரும்பும வாசிக்க ஏதுவாக எளிமையான மொழியில், எளிமையான வடிவில் கொண்டுவரும் நோக்கில் ஆசிரியர் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகமும்  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 2016 இதழில் பல புதிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் பல புதிய பகுதிகள் இடம் பெறும். 

வாசகர்கள், இதழ் குறித்த தங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கரிசனத்துடன் கூடிய தங்கள் விமர்சனங்களே பூவுலகு இதழை அடுத்தக் கட்டத்துக்கு இட்டுச் செல்லும். 

இதழ் உருவாக்கத்திலும் வாசகர்களின், எழுத்தாளர்களின், படைப்பாளிகளின் பங்களிப்பை வரவேற்கிறோம். 

சூழல் சார்ந்த உங்கள் அனுபவங்களை, கருத்துகளை, விமர்சனங்களை, பார்வைகளை படைப்பாக்கி எங்களுக்கு அனுப்பலாம். உங்கள் பகுதியை சீர்குலைக்கும் பிரச்சினைகள் குறித்து, தனி நபராகவோ, அமைப்பாகவோ சூழலை பாதுகாக்கும் சக்திள் குறித்து, சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பயண அனுபவத்தை, அப்போது நடந்த நகைச்சுவை சம்பவங்களை, சந்தித்த நம்பிக்கை தரும் நண்பர்களை, தொழில்நுட்பத்தை இவ்வாறு சூழலை பாதுகாக்கும் எது குறித்தும் தங்கள் படைப்பு இருக்கலாம். 

தங்கள் படைப்புகள் கட்டுரைகளாக, கவிதைகளாக, புனைகதைகளாக, ஓவியங்களாக, சித்திரக்கதைகளாக, கருத்துப்படங்களாக, புகைப்படங்களாக எந்த வடிவத்திலும் நீங்கள் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அவற்றில் பிரசுரத்திற்கு ஏற்றவை தேர்ந்தெடு்க்கப்பட்டு பூவுலகு இதழிலும், பூவுலகு மின்மினி மாணவர் இதழிலும் அச்சேற்றப்படும். பூவுலகு இணையத்திலும ்இணைக்கப்படும். 

படைப்பில் முன் அனுபவமில்லாதவர்களும் தயக்கமின்றி தங்கள் படைப்பு முயற்சிகளை எங்களுக்கு அனுப்பலாம். அனுபவமுள்ள படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை செப்பனிடுவதோடு, தங்களை தொடர்பு கொண்டு செறிவான படைப்புகளை உருவா்க்குவது குறித்து தக்க ஆலோசனைகளும் வழங்குவர். 

இப்பணிகளில் தேர்ந்தெடு்க்கப்படுபவர்களுக்கு நேரடி ஊடகப் பயிற்சி விரைவில் அளிக்கப்படும். 

உங்கள் படைப்புகளை write4poovulagu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி்க்கு அனுப்பலாம். 

பூவுலகு இனி மாத இதழாக தொடர்ந்து வெளிவரும். ஆண்டுச் சந்தா ரூ.300/- சந்தா தொகையை Poovulagin Nanbargal என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக அனுப்பலாம். அல்லது Poovulagin Nanbargal, Current Account No.1154135000004357, Karur Vysya Bank, Anna Nagar, Chennai (IFSC Code: KVBL0001154)என்ற வங்கிக் கணக்கில் செலுத்தலாம். 

ஏற்கனவே சந்தா செலுத்தி இதழ் கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களை info@poovulagu.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். 

சூழலை பாதிக்காத வணிக நிறுவனங்களிடமிருந்தும், சேவைத் துறையினரிடமிருந்தும் பூவுலகு மற்றும் மின்மினி இதழ்களுக்கு விளம்பர உதவிகளும் தேவை.

மேலும் விவரங்களுக்கு திரு. ராஜாராம் அவர்களை 90949 90900 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

-பூவுலகின் நண்பர்கள்